14 செப்டம்பர், 2013

ஹாலிவுட் படத்தில் அஜீத்தை இயக்க விருப்பம்: விஷ்ணுவர்தன்

ஹாலிவுட் படத்தில் அஜீத்தை இயக்க விருப்பம்: விஷ்ணுவர்தன்


நடிகர் அஜீத்தை வைத்து ‘பில்லா’ படத்தை எடுத்தவர் விஷ்ணுவர்தன். தற்போது இவர் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள ‘ஆரம்பம்’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. வரும் தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஷ்ணுவர்தன் கூறும்போது, ஆரம்பத்தில் பாலிவுட்டில் கால் பதிக்கவேண்டும் என்றுதான் எண்ணினேன். பாலிவுட் செல்வதற்கு கோலிவுட் திரையுலகம் எளிதாக உதவும் என்பதற்காக இங்கு கணக்கை தொடங்கி விட்டேன். நல்ல கதை இருந்தால் போதும், பாலிவுட்டில் பெரிய ஆளாக ஆகிவிடலாம்.

ஹாலிவுட்டிலும் ஒரு படம் இயக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. அஜீத்தை ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் ஒரு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்ட விரும்புகிறேன். அஜீத் தற்போது ரொம்பவும் பிசியாக உள்ளார். வாய்ப்பு கிடைக்கும்போது இந்தியிலும், ஹாலிவுட்டிலும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். 
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 கருத்துகள்

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 2DayRamanathapuram
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top