23 டிசம்பர், 2013

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திடீர் நெஞ்சுவலி: ஆஸ்பத்திரியில் அனுமதி

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திடீர் நெஞ்சுவலி
 ஆஸ்பத்திரியில் அனுமதி



தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா தமிழில் 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவருடைய இசை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்திழுக்கும். சிம்பொனி இசையில் சாதனை புரிந்திருக்கும் இவரது இசை உலகமெங்கும் பரவி உள்ளது.

‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் கடந்த 30-வருடங்களுக்கும் மேலாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இன்று இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல் நலம் மெல்ல தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிடுவார் என்று கூறப்படுகிறது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 கருத்துகள்

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 2DayRamanathapuram
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top